சுவிஸ் வீதிகளில் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக விபத்துத் தடுப்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வீதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் காரணமாக சராசரியாக 12 பேர் பாரதூரமான கா காயங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டிலும் சுவிட்சர்லாந்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் வீதி விபத்துக்கள் காரணமாக 4096 பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 236 என தெரிவிக்கப்படுகின்றது. பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் எண்ணிக்கை 1398 ஆக காணப்படுகிறது. டெசினோ கன்டோனில் அதிக அளவு வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில், சுவிஸ் சாலைகளில் இறப்பு குறைவாக இருப்பதைக் தரவுகள் காட்டுகிறது.
ஏனைய 21 ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் சுவிட்சர்லாந்து பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.