சுவிட்சர்லாந்தில் மூடப்பட்ட நெடுஞ்சாலை : இத்தாலிக்கு செல்பவர்கள் அவதி பல சுவிஸ் மாகாணங்களில் கோடைகாலப் பள்ளி விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான முக்கிய வழித்தடங்களில் ஒன்றான ஏ 13 பாதையை மூடுவதால், விடுமுறைக்காக தெற்கே வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பல சுவிஸ் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்தமான கோடைகால இடமாக இத்தாலி உள்ளது. இது புவியியல் ரீதியாக காரில் செல்வதற்கு இலகுவாக இருப்பது மட்டுமல்லாமல், அந்நாடு ஏராளமான கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மேலும் நல்ல வானிலை நிலவுவதால் சுவிஸ் குடும்பங்கள் அங்கு செல்வதை அதிகம் விரும்புகிறார்கள்.

ஆனால் இந்த கோடையில் இத்தாலிக்கு வாகனம் மூலம் செல்வது குறிப்பாக அடுத்த சில வாரங்களில், இலகுவான ஒரு விடயமாக இருக்காது. சமீபத்திய பாரிய இடியுடன் கூடிய மழை, மண் மற்றும் இடிபாடுகளின் நிலச்சரிவை கட்டவிழ்த்து விட்டது. இது ஏ 13 மோட்டார் பாதையின் வடக்கு- தெற்கு பகுதியை பாரியளவில் சேதப்படுத்தியது.
இடிந்து விழுந்த பகுதியானது, கிராவுண்டன் கன்டோன் துசிஸ் மற்றும் துர்காவ் கன்டோனின் பெலின்சோனா இடையே, சுவிட்சர்லாந்தை இத்தாலியுடன் இணைக்கும் ஒரு பகுதி என்பதால், பயணிகள் மற்றும் வணிகப் போக்குவரத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஏ 13 ஐச் சுற்றியிருக்கும் சான் பெர்னார்டினோ கணவாய், மோட்டார் பாதையின் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போலவே போக்குவரத்திற்கும் மூடப்பட்டது. ‘மேலும் மறு அறிவித்தல் வரை’ அவை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராபண்டன் கன்டோனல் பொலீசாரின் கூற்றுப்படி, அங்குள்ள பகுதி ‘மாதங்களுக்கு’ மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கும் அதே நேரத்தில் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் ‘ஏ13 ஐ மூன்று முதல் நான்கு வாரங்களில் மீண்டும் திறக்க முடியும்’ என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்புகளை திட்டவட்டமாக நம்பமுடியாது எனவும் தெரிவிக்கிறார்கள். சில நேரங்களில் இந்த காலக்கெடுவிற்குள் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே சாலை மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற போதிலும் அது தொடர்ச்சியாக நிலவும் காலநிலையில்தான் தங்கியுள்ளது என்கிறார்கள்.
எப்படியிருந்தாலும், நீங்கள் எதிர் வரும் வாரங்களில் தெற்கே செல்கிறீர்கள் என்றால், சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்தது போல் போக்குவரத்து சற்று கடினமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
மாற்றாகப் பயன்படுத்தப்படும் கன்டோனல் சாலையும் புயலால் சேதமடைந்துள்ளமையே இந்த சிக்கல் நிலமைகளுக்கு மேலும் காரணமாக அமைகிறது. எனினும் இந்த போக்குவரத்து சிக்கல்களை தவிர்க்க பெட்ரோ அமைப்பு மாற்று பாதைகளை பரிந்துரை செய்துள்ளது. எனினும் அந்த பாதைகள் மிக அதிக நேரம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.