சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் மில்லியன் கணக்கில் சேதம் ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய நிலமைகள் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் பல ஆல்ப்பின் பள்ளத்தாக்குகளில் ஏற்பட்ட பேரழிவுகளின் சேதங்கள் இன்னும் வழமை நிலைக்கு திரும்பவில்லை. கிராவுன்டன் தெற்கு மிசாக்ஸ் பள்ளத்தாக்கில் காணாமல் போன ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கிராவுண்டன் கன்டோனின், அவசர சேவைகள் அறிவித்தபடி, ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு பேரைக் காணவில்லை என தெரிவித்துள்ளது.
(c) Keystone
வெள்ளிக்கிழமை மாலை பள்ளத்தாக்கில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதோடு மோசா நதி அதன் கரையில் பெருக்கெடுத்து ஓடி A 13 தேசிய சாலையின் சில பகுதிகளை அடித்துச் சென்றுள்ளது.
இதனால் கன்டோனல் சாலையும் சேதமடைந்து மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் நான்கு பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் வீடு ஒன்றிற்குள் இருந்து சனிக்கிழமை காலை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
(c)Keystone
டெசினோ மாகாணத்தின் ஃபெடரல் கவுன்சிலர் இக்னாசியோ காசிஸ் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.