சுவிட்சர்லாந்தில் பெருக்கெடுக்கும் ஏரிகள் : மத்திய சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரிக்கை வலாய்ஸ் மாகாணத்தில் நதிகளின் பெருக்கெடுப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்சர்லாந்தில் பெய்து வரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் வலாய்ஸ்சில் ரோன்நதி மற்றும் அதன் துணை நதிகள் வெள்ளப்பெருக்கு காரணமாக அவற்றின் கரைகள் நிரம்பி வழியும் அபாயம் உள்ளது.
(c)pomona(c)pomona(c)pomona
இதனால் பல சேர்மாட் உட்பட பல மலைக்கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ள அபாயம் காரணமாக நகரத்தில் மாற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் சேர்மாட்டுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நகரத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெனிவா ஏரியும் அபாய நிலையை தொட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரித்துள்ளது. நாளை தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் அபாயநிலமை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.