கன்டோன் கிராவுண்டனில் ஹெலிகாப்டர் விபத்து!!
கன்டோன் கிராவுண்டனில் ஹெலிகாப்டர் விபத்து ஒன்று ஏற்பட்டதில் விமானி காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை, யூன் 18, 2024 அன்று, நிகழ்ந்துள்ளது.
29 வயதான ஹெலிகாப்டர் பைலட் செவ்வாயன்று மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளார். ஹெலிகாப்டருடன் இணைக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளை ஓர் இடத்தில் இறக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, ஹெலிகாப்டர் 50 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து தரையில் மோதியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
விமானிக்கு தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு கிராபண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து நடந்த இடத்தைப் பாதுகாக்க, கிராபண்டன் கன்டோனல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கான அலுவலகத்தின் நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
News :- (c) Graubünden Polizei