அமெரிக்க சுற்றுலாப்பயணி மீது சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் சுவிட்சர்லாந்தில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் லவுசானில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கன்டோன் வாட்டின் தலைநகருக்கு வருகை தந்த 50 வயது பெண் ஒருவர், லவுசான் பழைய நகரை சுற்றிப்பார்க்கும்போது கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இத்தாக்குதல் கொள்ளை முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணி தனது பையுடன் தப்பிச் செல்ல முயன்றபோதே குற்றவாளி அவரது தோளில் குத்தியுள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை, ஜூன் 8, 2024 அன்று, அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளர்.
அந்த வழியாக சென்றவர்கள் தாக்கியவரை தடுக்க முயன்ற போதும், அவர் தப்பியோடினார். குற்றவாளியை தேடும் முயற்சிகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பாதுகாப்பான நகரத்தில் இத்தகைய தாக்குதல்கள் அரிதாகவே காணப்படுவதாகவும், ‘குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை குறிவைக்கும்’ சம்பவங்கள் எதுவும் லவுசானில் பதிவாகவில்லை என்றும் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.