மூன்றாம் பாலினத்தை அங்கீகரிக்க மறுக்கும் சுவிட்சர்லாந்து
பைனரி அல்லாத சுவிஸ் பாடகர் நெமோ, மே மாதம் யூரோவிஷன் பாடல் போட்டியில் வென்ற பிறகு, மூன்றாம் பாலினத்தை அங்கீகரிக்க சுவிட்சர்லாந்தின் அவசியம் பற்றி அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும், திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பின்படி, சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் அதாவது 57 சதவிகிதம் மக்கள் இன்னும் இருமை அல்லாத நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிராக உள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அதே கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர் இந்த நடவடிக்கையை தற்போது எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.