சூரிச் விமான நிலையத்திற்கான இரவு நேர விமானக் கட்டுப்பாடுகள் அடுத்த வார இறுதியில் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் நிட்வால்டனில் உள்ள பர்கன்ஸ்டாக்கில் உக்ரைன் அமைதி மாநாடு இடம்பெறவிருக்கின்றமையாகும்.
திட்டமிடப்பட்ட விமானங்கள் சனி முதல் ஞாயிறு வரை மற்றும் ஞாயிறு முதல் திங்கள் வரை இரவுகளில் 2:00 மணி வரை புறப்பட்டு தரையிறங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சூரிச் விமான நிலையம் வழியாகக் கையாளப்படும் உக்ரைன் அமைதி மாநாட்டிற்கு சுமார் 90 மாநிலப் பிரதிநிதிகளின் வருகை மற்றும் புறப்பாடுகள் பற்றி சிவில் ஏவியேஷன் பெடரல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மாநாட்டுக்கான பிரதிநிதிகளின் வருகையால் சூரிச் வமானநிலையத்தில் வழக்கமான விமான நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.