“சுவிஸ் தமிழர்களின் 44 ஆண்டு கால புலம்பெயர் வாழ்க்கை” டாவோஸ் மகாநாட்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு
தமிழ் தொழில்முனைவோரின் உலகளாவிய உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் ஆரம்பம் தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.
Dont Miss It ->>சுவிட்சர்லாந்தில் “TheRise” அமைப்பின் உலகபொருளாதார மாநாடு
கடந்த 3 நாட்களாக இடம்பெற்ற குறித்த மாகாநாட்டில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ் தொழில்முனைவர்கள் மற்றும் கலந்துகொண்டுள்ளதோடு மேலும் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
தொழில் அதிபர்களின் பல்வேறு கலந்துரையாடல்கள் ஒவ்வொரு நாளும் வெகு சிறப்பாக இடம்பெற்றுவந்த நிலையில் இறுதி நாளான இன்று, “சுவிஸ் தமிழர்களின் 44 ஆண்டுகள் புலம்பெயர் வாழ்க்கை” என்ற தொனியில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு ஒன்று இறுதியான இடம்பெற்றது.
Dont Miss It ->> தமிழ் தொழில்முனைவோரின் உலகளாவிய உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் ஆரம்பம்
திரு – அன்ரன் பொன்ராஜா அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமானது. இலங்கை சுதந்திரம்பெற்ற பின்னர் இலங்கையில் அழுல்படுத்தப்பட்ட தனிச்சிங்கள மொழி சட்டத்தின் பின்னர் தமிழர்கள் முதல் முதலாக புலம்பெயர் நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்த விடயம் பற்றி பேசி திரு பொன் ராஜா அதன் பின்னர் எந்தெந்தெந்த காலப்பகுதியில் எத்தனை தமிழர்கள் எங்கெல்லாம் புலம்பெயர்ந்தார்கள் என்கின்ற பல்வேறு விடயங்களை புள்ளிவிபரங்களோடு குறிப்பிட்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றியவர்களால் சுவிஸ் தமிழர்களின் 44 ஆண்டுகால வாழ்வு மற்றும் வரலாறு பற்றிய பல்வேறு விடயங்கள் மற்றும் கடந்தகால அனுபவங்களையும் பேசிச்சென்றார்கள்.
Dont Miss It ->>தமிழர்களுக்கு சமஷ்டி அதிகாரம் இருந்தால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரமுகர்கள் தங்கள் அனுபவங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டதோடு மேலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு பல கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

பல சிரமத்தின் மத்தியிலும் உலகத்தமிழர்களை ஒரு கூரையின் கீழ் ஒன்றிணைந்து மிகப்பெரிய மகாநாட்டை சிறப்புற நடத்திக்காட்டிய எழுமின் அமைப்பின் சுவிட்சர்லாந்து தலைவரான திரு: ராசமாணிக்கம் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
செய்தி :- தேவா மதன்