ஆர்காவ்வில் சவாரி விபத்தில் சிக்கிய குதிரை கருணைக்கொலை!!
கன்டோன் ஆர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையான குதிரை சவாரி விபத்து ஏற்பட்டது. இதில் குதிரை மற்றும் இருவர் காயமடைந்தனர்.
ஆர்காவ் கன்டோனல் போலீசாரின் கூற்றுப்படிஇ குறித்த விபத்து காலை 9:30 அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
(c)Kanton Polizei Argau
மேலும், 53 வயதான ரைடிங் பயிற்றுவிப்பாளர், 13 வயது சவாரி மாணவனுடன் நடந்து சென்றபோது, குதிரை பள்ளத்தில் விழுந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குதிரையும் இரண்டு பேரும் பள்ளத்தாக்கில் விழுந்து காயங்களுக்கு உள்ளாகினர். குதிரையின் கடுமையான காயங்கள் காரணமாக இது கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த நபர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.