சுவிட்சர்லாந்து முழுவதும் பூட்டப்படதா கார்களில் இருந்து அதிக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாசல் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பாசல் கன்டோனில் இருவேறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பாசல் ஹோல்ஸ்டைன் பகுதியில் தனது பூட்டப்படாத காரில் இருந்து பொருட்கள் திருடப்பட்டதாக ஒருவர் முறைபாடு செய்தார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 வயது மற்றும் 29 வயதான அல்ஜீரியர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் லீஸ்டல் பகுதியில் பல கார்களுக்கு திருட்டில் ஈடுபட்ட இருவர் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் ஓடித்தப்பியுள்ளதாகவும் மற்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாசல் போலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் 26 வயதான அல்ஜீரியர் என்பது குறிப்பிடத்தக்கது.