சுவிட்சர்லாந்தின் தபால் சேவை நிறுவனமான சுவிஸ் போஸ்ட் நிறுவனம் 170 கிளைகளை மூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நான்காண்டு காலப் பகுதியில் இவ்வாறு கிளைகள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் 600 தபலாகங்களும் 2000 சேவை நிலையங்களையும் செயற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(c) Keystone / Peter Klaunzer
கடந்த நான்கு ஆண்டுகளில் தபாலகங்களில் மரபு ரீதியான வைப்புக்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சியுள்ள 600 தபாலகங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தபாலகங்களின் குறைப்பின் விளைவாக எந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஓய்வு பெறுவதால்இ சுவிஸ் போஸ்ட் அடுத்த சில ஆண்டுகளில் பணிநீக்கங்களைச் செயல்படுத்தாமல் சுவிட்சர்லாந்து முழுவதும் அதிக ஊழியர்களை பணியமர்த்துவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.