ஜெனீவா பொது போக்குவரத்து சேவை பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 200 புதிய ஓட்டுனர்கள் தேவை என அறிவித்துள்ளது.
தங்களுடைய நெட்வொர்க் விரிவடையும் போது கையிருப்பில் அவர்களுக்கு மேலும் ஓட்டுனர்கள தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கு வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி பகுதி நேரமாக வேலை செய்ய விரும்புபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனவும் பெண்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.