செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் சுவிட்சர்லாந்து முன்னணி சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதாவது 32 சதவிகிதம் ஊழியர்கள் தங்கள் வேலைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள்-
இது ஐரோப்பிய சராசரியான 23 சதவிகிதத்தை விட அதிகமான எண்ணிக்கையாகும்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு- தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் மிகவும் அதிகமாக உள்ளது.

மைக்கேல் பேஜ் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.
மொத்தத்தில்இ சுவிட்சர்லாந்தில் உள்ள 69 சதவீத பணியாளர்கள்இ செயற்கை நுண்ணறி தொழில்நுட்பமானது அவர்களின் தொழில் வாழ்க்கையை சாதகமாக மாற்றும் எனவும், புதிய விடயங்களுக்கு ஏற்ப உதவுவதோடு, உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்றும் நம்புகிறார்கள்’ என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.