மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக புதிய தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 4 சதவீத ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள்.
இருப்பினும், 0.4 வீதமானவர்கள் மட்டுமே சட்ட வரம்பிற்கு மேல் மதுபான அளவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்புட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய சாலை பாதுகாப்பு அபாயங்களில் ஒன்றாக உள்ளது. இது ஒவ்வொரு எட்டு சாலை விபத்துக்களில் ஒன்றுக்கு காரணமாகிறது.

2023 ஆம் ஆண்டில், குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களால் சுவிஸ் சாலைகளில் 506 கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களின் விபத்துக்கு வழிவகுத்துள்ளது. அதுமாத்திரமின்றி 31 பேரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துபவர்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.