கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் ‘ஈழநாதம்’ சுரேன் கார்த்திகேசுவின் ‘போரின் சாட்சியம்’ நூல் அறிமுகவிழா இடம்பெற்றது.
பொதுச்சுடரினை மாநிலச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஏற்றி வைக்க வரவேற்புரையினை அன்பரசன் நிகழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து இளம் பாடகர்களின் முள்ளிவாய்கால் நினைவு சுமந்த பாடல்கள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறையினர் மண்டபத்தினூடாக ‘போரின் சாட்சியம்’ நூலை அரங்குக்கு எடுத்து வந்தனர்.
முதற் பிரதியை சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவையின் பணிப்பாளர் திரு. பார்த்தீபன் கந்தசாமி வெளியிட்டு வைக்க ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் துணைவியார் திருமதி நந்தினி சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
மாணவிகளின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த எழுச்சி நடனங்களும் இந்திரன் குழுவினரின் மங்கல்வாத்தியத்திலான தாயக இசையும் இடம்பெற்றன.