சுவிஸ் பிரபல மோட்டார் பந்தய வீரரின் கைக்கடிகாரம் ஏலத்தில் சுவிட்சர்லாந்தின் பிரபல மோட்டார் பந்தய வீரர்மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் புகழ்பெற்ற பந்தய ஓட்டுநர் ஷூமேக்கரின் சேகரிப்பில் இருந்து எட்டு கடிகாரங்களை மூன்று மில்லியன் யூரோக்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளனர். ஜெனிவாவில் இது தொடர்பான ஏல விற்பனை இடம்பெற்றுள்ளது.
ஏலத்தின் சிறப்பம்சமாக ஷூமேக்கரின் தனித்துவமான வாட்ச் 1.2 மில்லியன் சுவிஸ் பிராங்குகளைப் பெற்றது. இது 2004 இல் ஷூமேக்கருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் கைக்கடிகாரங்களை வாங்கியவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவாவிற்கு அருகில் வசிக்கும் ஷூமேக்கர், 2013 ஆம் ஆண்டு பனிச்சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார்.
இருப்பினும் கடிகார சேகரிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால் ஏராளமான விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.