சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரானாவா..? அதிகாரிகள் சொல்வது என்ன.? KP-2 எனப்படுகின்ற ஒரு புதிய கோவிட் மாறுபாடு சமீபத்தில் கண்டறியப்பட்டது.
தற்போது இது அமெரிக்காவில் பரவி வருகிறது. முந்தைய ஓமிக்ரான் வைரஸ்களுடன் ஒப்பிடும்போது இது அதிக பரிமாற்றத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. கோவிட் வைரஸ்கள் தொடர்ந்து உருவாகி, மாற்றமடைந்து வருவதால் இது ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் இந்த குறிப்பிட்ட மாறுபாடு இன்றுவரை, சுவிட்சர்லாந்தில் கண்டறியப்படவில்லை என்று சுவிஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ‘நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது சுட்டிக்காட்டியுள்ளது.
தொற்றுநோயியல் நிபுணர்கள் ‘எதிர்காலத்தில் ஒரு பெரிய அலையின் அபாயம் குறைவாகவே இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான மதிப்பீட்டை இன்னும் செய்ய முடியாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.