சுவிஸ் விமான நிறுவனம் புதிய நீண்ட தூர இடங்களுக்கான விமானசேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
மே, 7 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம் சூரிச் மற்றும் தென் கொரிய தலைநகர் சியோல் இடையே, தனது முதல் நேரடி விமானசேவையைத் தொடங்கவுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறை குறிப்பிட்ட சேவை வழங்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச்சிலிருந்து மதியம் 1:40 அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 அளவில் சியோலில் தரையிறங்குகிறது.
மேலும் சியோலில் இருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9:55 அளவில் புறப்படும் விமானம் மாலை 4:50 அளவில் சூரிச் வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.