துபாயில் புயல் காரணமாக சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாயில் புயல் காரணமாக சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக துபாயில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன- இது சுவிஸ் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.
துபாயின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் தெருக்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெருநகரில் உள்ள விமான நிலையமும் தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதைகள் வெள்ளத்தில் முற்றூக மூழ்கியுள்ளன.
துபாய் விமான நிலையம்இ விமானப் போக்குவரத்தில் தாமதங்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாநில விமான நிறுவனமான எமிரேட்ஸில் பறக்கும் அனைத்து பயணிகளும் இன்று புதன்கிழமை செக் இன் செய்ய முடியாத எனவும் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்திலும் கடந்த ஒரு சில நாட்களாக சூடாக காலநிலை நிலவியபோதும் தற்போது மீண்டும் குளிருடனான காலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே கடும் காற்றும் வீசி வருகின்றது.
மேலும் ‘துபாயில் நடந்து வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு’ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று புதன்கிழமை திட்டமிடப்பட்ட இரண்டு விமானங்களை விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இவை சூரிச்சிலிருந்து துபாய் செல்லும் விமானம் மற்றும் துபாயிலிருந்து சூரிச் செல்லும் விமானம் ஆகும். தற்போது மற்ற இணைப்புகளில் பயணிகளை மீண்டும் முன்பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘நேற்று சூரிச்சிலிருந்து துபாய்க்கு பறக்க வேண்டிய விமானம் ஒன்று அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் பயணிகள் இல்லாமல் அபுதாபியிலிருந்து சூரிச்சிற்கு நேரடியாக திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நேற்றைய விமானத்தில் துபாய் செல்லவிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் இப்போது அபுதாபியில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்படு;டுள்ளதாக சுவிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.