உலகின் சிறந்த பாடத்திட்டங்கள் உள்ள நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு.!! சுவிட்சர்லாந்தில் உலகின் மிக உயர்ந்த கல்வித் திட்டங்கள் உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் அதிக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை என்றாலும் பாடத்தின் அடிப்படையில் தரவரிசையில், அது முதல் இடத்தில் உள்ளது.
உதாரணமாக, சூரிச்சில் உள்ள ஃபெடரல் பாலிடெக்னிக் நிறுவனம் மூன்று பாடங்களில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் அறிவியல், இயற்பியல் மற்றும் புவியியல் போன்ற பாடத்திட்டங்களே அவை.
பிரிட்டிஷ் பல்கலைக்கழக ஆலோசகர் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் புதன்கிழமை இந்த தரவரிசை பட்டியல் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் 1,500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மொத்தம் 16,400 பல்கலைக்கழக திட்டங்கள் தரவரிசையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவற்றில் உலகிலேயே சுவிட்சர்லாந்தில்தான் சிறந்த படிப்புத் திட்டங்கள் அதிகம் உள்ளன என்ற முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.