ஜெனிவா-லண்டன் ரயில் இணைப்புக்கான பிரச்சாரம் வேகம் பெறுகிறது
பாசல் மற்றும் லண்டன் இடையே ஒரு ரயில் சேவையில் கிடைத்த நேர்மறையான கருத்துக்களைத் தொடர்ந்து , இப்போது சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவை இங்கிலாந்தின் தலைநகருடன் ‘இணைக்க’ இதேபோன்ற திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் மனுவை சுவிஸ்-பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற “நாடின் மெக்கார்மிக்” என்பவர் தொடங்கியுள்ளார்.
ஜெனிவாவிற்கும் அங்கிருந்து லண்டன் செல்வதற்கும் நேரடி இணைப்பு, பாசெலுடன் ஒப்பிடும்போது பிரிட்டிஷ் பயணிகளுக்கு அதிக அர்த்தமுள்ளதாக வாதிடுகிறார்.
“ஜெனீவா விமான நிலையத்தில் பாசல் மற்றும் சூரிச் விமான நிலையங்களை விட லண்டனுக்கு செல்லும் பயணிகள் அதிகம்,” என்றும் அவர் கூறினார் .