சுவிட்சர்லாந்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள துறைகள் இவைதானாம்..!! சுவிஸ் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பல நிறுவனங்கள் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்பவர் குழுமத்தின் புதிய கணக்கெடுப்பில் இருந்து இவ்விடயம் தெரியவந்துள்ளது.
ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனங்கள், நிதி மற்றும் ரியல் எஸ்டேட், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் வாகனத் துறைகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட, குறித்த துறைகளுக்கான வேலைவாய்புகள் அதிகம் காலியாகவுள்ளதாகவும் மேன்பவர் குழுமத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.