ஐரோப்பிய தமிழர் மதிப்பளிப்பு கழகம் பெருமையுடன் நடாத்தும் ஈழத்தின் ஒப்பற்ற கலைஞரான விவி வைரமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் 28ம் திகதி பேர்ன் நகரில் குறித்த நிகழ்வு இடம்பெற இருக்கிறது. அன்றைய நிகழ்வில்இ மயானகாண்டம் நாடகம் இடம்பெறுகின்றது . அரிச்சந்திரனாக மயிலையூர்இந்திரனும், சந்திரமதியாக நடிகமணி ஐயாவின் பேத்தி சுகிதா அவர்களும் நடிக்கின்றார்கள்.
கலைப்பெருமகனின் நூற்றாண்டு விழாவுடன் இயல் இசையும் நாடகமும; இடம்பெறுவதோடு கலைஞர் கௌரவிப்பும் இடம்பெறவிருக்கின்றது. நவீன யுகத்தில் கலைவடிவங்கள் மாறுபடலாம்.
ஆனால் எந்த நவீனத்தாலும் எமது பாரம்பரிய வழித்தோன்றலில் உருவான கலைப்பண்பாட்டை மாற்றியமைக்க இயலாது.
வி.வி.வைரமுத்து
எமது கலை பண்பாட்டுத்தேடல்கள் தீவீரமானதும் ஆழமானதாக அமையப்பெற்றது. அதனால்தான் என்னவோ வைரமுத்து என்ற மங்காத மாணிக்கம் எமக்கு வரமாய் கிடைத்தது. நூற்றாண்டு நாயகனின் வரலாறு இன்னும் பல காலங்கள் வாழவேண்டும் என SWISSTAMILRADIO மற்றும் SwissTamil24.Com இணையதளம் சார்பில் எமது வாழ்த்துக்கள்!!