சுவிஸில் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் 30000 ஏதிலிகள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவார்கள் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் ஏதிலிக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏதிலிக் கோரிக்கையாளர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிபரத் தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
எனினும் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக கூடுதல் எண்ணிக்கையிலான இருப்பிட வசதிகள் செய்து கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.