சுவிஸ் “தமிழ் மின்னல்” இசைக்குழு நடாத்திய மாபெரும் கலை நிகழ்வு
“வணக்கம் தமிழா mega nite 2023” நிகழ்வு 25.12.2023 அன்று சுவிஸ் பேர்ண் மாநகரில் மிகப்பிரமாண்டமாக ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக swiss singer 4 பாடல் போட்டி நடாத்தப்பட்டது. SEASON 4 சுவிஸ் சிங்கர் போட்டி நிகழ்விற்கு நடுவர்களாக தாயகத்தின் மூத்த கலைஞர் சங்கீத பூசணம் சிம்மக்குரலோன், இலங்கை TMS திரு நாகமுத்து ரகுநாதன் அவர்களும் ஐரோப்பிய புகழ் ஜேர்மன் இசையமைப்பாளர் பிறின்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி மாலை நான்கு மணியளவில் இருந்து இரவு 11 மணிவரை நடைபெற்றது. பாடல் போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மூவர் தெரிவு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படடார்கள்.
தெரிவான ஒவ்வொருவருக்கும் வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். இவ்வாண்டு லண்டன், பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றியது குறிப்பிடத்தக்கது.
பின்னணி இசை சுவிஸ் தமிழ் மின்னல் 100% நேரடி இசைக்குழு LIVE MUSIC BAND