சுவிட்சர்லாந்தின் மிக நீளமான நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மிக நீளமான நெடுஞ்சாலையான 410 கி.மீ நீளமுள்ள A1 இன் பகுதிகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் இடையூறுகளை விளைவிப்பதாக காணப்படுகிறது.
பெர்ன் – சூரிச் மற்றும் லவுசான் – ஜெனீவா ஆகிய நெடுஞ்சாலைகளில், ஏ1 சாலையை குறைந்தது ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை மாநில கவுன்சில் புதன்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது .

எனினும் இந்த நடவடிக்கையை எதிர்த்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என சுற்றுச்சூழல் இயக்கம் சங்கம் கூறி வருவதால், இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெரியவில்லை.