சுவிஸ் சுற்றுலாத்தலத்தைக் காணச் சென்ற 160 பேர் சிக்கலில் திரைப்படங்களில் காட்டப்படும் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றைக் காணச் சென்ற சுமார் 160 சுற்றுலாப்பயணிகளை மீட்க ஹெலிகொப்டர்களை ஏற்பாடு செய்யும் நிலை ஏற்பட்டது.
மலையுச்சியில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள்
கடந்த சனிக்கிழமை மதியம். பிரபல ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான On Her Majesty’s Secret Service என்னும் திரைப்படத்தில் காட்டப்படும் Schilthorn என்னும் மலைச்சிகரத்தைக் காண்பதற்காக, சுமார் 160 சுற்றுலாப்பயணிகள் கேபிள் காரில் சென்றிருந்தார்கள்.
அப்போது, திடீரென கேபிள் கார் பழுதானதால், அந்த சுற்றுலாப்பயணிகளனைவரும் அந்த சிகரத்திலேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

ஆகவே, ஹெலிகொப்டர்கள் மூலம் அவர்கள் அனைவரையும் மீட்க வேண்டியதாயிற்று. அவர்களை ஹெலிகொப்டர்கள் Mürren என்னும் கிராமத்தில் இறக்கிவிட, அவர்கள் அங்கிருந்து மற்றொரு கேபிள் கார் மூலம் கீழே இறங்கினார்கள்.
அவர்கள் அனைவரையும் மீட்க சுமார் மூன்று மணி நேரம் ஆனது.