பாரா கிளைடிங் விபத்தில் 74 வயதான சுவிஸ் நாட்டவர் மரணம்
வலேஸ் மாநிலத்தின் ஃபீஷ் (Fiesch) பகுதியில்செவ்வாய்க்கிழமை 12 ஆகஸ்ட், ஒரு பாரா கிளைடிங் விபத்தில் 74 வயதான சுவிஸ் நாட்டு முதியவர் உயிரிழந்தார் என்று மாநில காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
காவல்துறை தகவலின்படி, இதுவரை தெரியாத காரணங்களால், அவர் தனது பாரா கிளைடரின் கட்டுப்பாட்டை இழந்து, கிராம மையத்தில் உள்ள ஒரு பாலம் அருகே, வைஸ்வாசெர்பாக் (Weisswasserbach) ஆற்றில் விழுந்தார்.
சம்பவத்தை கண்ட சில பாதசாரிகள் உடனடியாக மீட்பு சேவையை அழைத்தனர். ஆனால் விரைவில் வந்த அவசர உதவி குழுவினரின் முயற்சிகளுக்கும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

@Kapo VS