வலைஸ் கன்டோனில் மலையேற்றத்தின் போது 53 வயது நபர் தவறி விழுந்து மரணம்
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் உள்ள ஹெரெமென்ஸ் நகராட்சியில் அமைந்துள்ள போயின்ட் டு க்ரெட் மலையில் (Pointe du Crêt), செப்டம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை, ஒரு ஹைக்கிங் விபத்தில் 53 வயது சுவிஸ் குடிமகன் உயிரிழந்தார். வலைஸ் கன்டோன் போலீஸ் திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.
போயின்ட் டு க்ரெட், பென்னைன் ஆல்ப்ஸ் தொடரில் அமைந்துள்ள 3,322 மீட்டர் உயரமுடைய மலை உச்சியாகும், இது (Hike) ஹைக்கர்கள் மற்றும் மலை ஏறுபவர்களிடையே பிரபலமான இடமாகும், ஆனால் கடினமான பாதைகள் மற்றும் உயரமான பாறை அரேட்கள் (ridges) காரணமாக ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், செப்டம்பர் 6 காலை, மூன்று மலையேறிகள் மலை ஏறும் போது, மதியம் 12:50 மணியளவில், 3,260 மீட்டர் உயரத்தில் உள்ள அரேட் (crest) பகுதியில் செல்லும் போது, 53 வயது ஆண் மலையேறி தவறி விழுந்தார்.

உடன் இருந்த இரு தோழர்களும் உடனடியாக மீட்பு சேவைகளை அழைத்தனர் மற்றும் முதலுதவி ரீதியான உயிர்காப்பு நடவடிக்கைகளை (resuscitation) மேற்கொண்டனர். வலைஸ் கன்டோன் மீட்பு அமைப்பு (Organisation Cantonale Valaisanne des Secours – OCVS144) இந்த அழைப்பைப் பெற்று, ஏர்-கிளேசியர்ஸ் (Air-Glaciers) ஹெலிகாப்டரை அனுப்பியது. மீட்புக் குழுவினர் விரைந்து வந்த போதிலும், ஹைக்கரின் இறப்பை மட்டுமே உறுதிப்படுத்தினர் மட்டுமே.
வலைஸ் பகுதி, சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்டுதோறும் ஏராளமான ஹைக்கிங் விபத்துகள் நிகழ்கின்றன, குறிப்பாக உயரமான பாதைகளில். அத்தகைய விபத்துகளில் பெரும்பாலானவை தவறான அடி வைப்பு, வானிலை மாற்றங்கள் அல்லது உபகரணங்களின் குறைபாடுகளால் ஏற்படுகின்றன.
மலைப் பகுதிகளில் பயணம் செய்யும் போது, உரிய உபகரணங்கள், வானிலை முன்னறிவிப்பு சரிபார்ப்பு, மற்றும் அனுபவமிக்க வழிகாட்டிகளுடன் செல்வது அவசியம். இத்தகைய துயரங்கள், மலை விளையாட்டுகளின் ஆபத்துகளை நினைவூட்டுகின்றன, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றன.