ஆரே ஆற்றில் மூழ்கிய 50 வயது பெண் உயிரிழப்பு – சோலோதுர்னில் துயரச்சம்பவம்
சொலுத்தூர்ன் ஆரே ஆற்றில் நேற்று பிற்பகல் (லாந்த்ஹவுஸ் பகுதியில்) நீந்திக்கொண்டிருந்த ஒரு பெண் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மூழ்கியதில் உயிரிழந்தார்.
கன்டோன் போலீஸ் வழங்கிய தகவலின்படி, அந்த 50 வயது பெண்ணை சொலுத்தூர்ன் நகர போலீஸ் ரோந்து குழுவினர் கண்டனர். அவர் மயக்க நிலையில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக மீளுயிர்ப்புக் கவனிப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்தப் பெண்ணுக்கு திடீர் உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்புப் பணிகளில் கன்டோன்போலீஸ், சோலோதுர்ன் நகர போலீஸ், மாநில வழக்குரைஞர் அலுவலகம், அவசர உதவி சேவை, சோலோதுர்ன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உளவியல் உதவி குழுவும் இணைந்து செயல்பட்டனர்.
@Kapo SO