சுவிஸில் இருந்து போலாந்துக்கு திருடி செல்லப்பட்ட E-பைக்குகள் பாசலில் செப்டம்பரின் நடுப்பகுதியில், ஒரு டெலிவரி டிரக்கைச் சோதனை செய்தபோது, சுங்கத்துறை ஊழியர்கள் 24 திருடப்பட்ட இ-பைக்குகளைக் கண்டறிந்துள்ளதாக மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
E-பைக்குகள் தவிர, இரண்டு தண்ணீர் பம்புகள் மற்றும் மின்சார உபகரங்கள் உட்பட ட்ரக் வண்டியில் இரண்டு ஆண்களும் பயணம் செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு, எல்லைப் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் போலந்தில் பதிவு செய்யப்பட்ட டெலிவரி டிரக்கை ஒரு எரிவாயு நிலையத்தில் கண்டனர். இதையடுத்து ரோந்துப் படையினர் பாசல்-ஃப்ரீபர்கர்ஸ்ட்ராஸ்ஸே எல்லைக் கடவையில் சோதனையை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.