சுவிட்சர்லாந்தில் அகில உலக கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை 30-9-23 அன்று சூரிச் மாகாணத்தில் தூர்தன் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த கம்பன் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அடியார்கள் பெருந்திரளாக கலந்துகொண்டிருந்தார்கள். வள்ளுவம் பேசுவோம் என்ற தொனியில் குறித்த நிகழ்வில் பலரும் வள்ளுவரின் அருமை பெருமைகளை சிறப்பாக பேசி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது மாத்திரம் இன்றி ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நெடுஞ்சாலை அருகில் இருக்கும் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தி நிகழ்வாகவும் இரு இடம்பெற்றமை சிறப்பான ஒரு விடயமாக பலராலும் பராட்டப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் எங்கும் இல்லாதவாறு வள்ளுவனுக்கு சிலை நிறுவியிருக்கும் ஒரே ஒரு ஆலயமாக ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயம் விளங்குகிறது.
அன்றைய நாள் 2 மணிக்கு பின்னராக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வின் ஆரம்பத்தில் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தனைக்கும் வழிகாட்டியாக ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பீடாதிபதியும் பிரதம குருக்களும் ஆகிய சுவாமி கரகண பவானந்தா அவர்கள் முன்நின்று நடாத்தியிருந்தார்கள்.
சுவிட்சலாந்து பேர்ன் வள்ளுவன் தமிழ்ப்பள்ளி முதல்வர் மணிவிழா.!!
அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தினும் இடம்பெற்ற வள்ளுவம் பேசுவோம் நிகழ்வில் கம்பன் மற்றும் வள்ளுவர் பற்றிய பல்வேறு பேச்சுக்கள் கவிதைகள் சான்றோர்களால் அரங்கம் அதிர உரைக்கப்பட்டது.

இது மாத்திரம் இன்றி இணைய வழியில் இணைந்து கொண்டும் பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் படைப்புக்களையும் காணொளி மூலம் பகிர்ந்து கொண்டமை பெருiமைக்குரிய விடயமாகவே பார்க்கப்பட்டது.

மிகவும் கலகலப்பாகவும்… சிறப்பாகவும் அறிவுபூர்பவமாகவும் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிற்றுண்டி உட்பட இரவு போசனமும் வருகை தந்த அனைவருக்கு ஆலய நிர்வாகத்தினாரால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.