ஷாஃப்ஹௌசன் நகரில் தொலைபேசி மோசடியில் 30,000 ஃபிராங்க் இழந்த பெண்
மனித உணர்வுகளை கையாளும் சிறந்த வஞ்சகத் தந்திரங்களை பயன்படுத்தி, மர்ம தொலைபேசி மோசடிக்காரர்கள் 75 வயதுக்குமேல் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் இருந்து 30,000 ஃபிராங்கை பறித்த சம்பவம் ஷாஃப்ஹௌசன் நகரில் நடந்துள்ளது. இது பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஷாஃப்ஹௌசன் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படி மோசடி நடந்தது?
மூதாட்டிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த நபர், “உங்கள் குடும்பத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது”, அல்லது “உங்கள் கணவர் பிரச்னையில் இருக்கிறார்” போன்ற பதட்டம் ஏற்படுத்தும் தகவலை கூறி, அவசரமாக பணம் தேவை எனக் கூறினார். இந்த அழைப்பில் மோசடிக்காரர், மிகவும் நம்பிக்கை வரும்படி பேசியதால் மூதாட்டி பதற்றமடைந்து, இரண்டு வங்கிகளில் இருந்து தலா 15,000 ஃபிராங்க் (மொத்தம் 30,000) பணத்தை எடுத்து, அவர்களது ஆணைப்படி ஷாஃப்ஹௌசன் நகரின் Albulastrasse பகுதியில் ஒரு கவரில் வைத்து விட்டார்.

மாலை நேரத்தில் தான், அந்த மூதாட்டி சந்தேகத்தில் இருந்து உணர்ந்து, உடனடியாக போலீசில் புகார் செய்தார். ஆனால் அந்த நேரத்துக்குள் பணம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.
போலீசின் எச்சரிக்கைகள் – இந்த யுத்திகளைத் தவிர்க்க சில முக்கிய ஆலோசனைகள்:
- அறிமுகமற்ற நபர்கள் அழைத்தால் எப்போதும் சந்தேகமாக இருங்கள்.
- தொலைபேசியில் உங்கள் சொத்துகள், வங்கி விவரங்கள் போன்றவை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- “நான் போலீசில் இருந்து பேசுகிறேன்” என்றால், அழைப்பை உடனே துண்டித்துவிட்டு, உங்களுக்குத் தெரிந்த போலீஸ் நிலைய எண்ணிற்கு நேரடியாக அழைக்கவும்.
- உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய நேரில் தொடர்புகொள்ளவும்.
- முக்கியமாக, உங்கள் சுற்றத்திலும் – குறிப்பாக மூத்த குடிமக்கள் – இத்தகைய மோசடிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். … என போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது:
முக்கிய குறிப்பு: இத்தகைய மோசடிகள் கடந்த சில மாதங்களாக சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மட்டுமல்ல, எல்லா வயதினருமே விழிப்புடன் இருக்க வேண்டும். பணம், நகை, ஆவணங்களை யாரிடமும் எளிதில் கொடுக்க வேண்டாம்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களுடன் பகிருங்கள்.
விழிப்புணர்வே பாதுகாப்பு!