வீதி வழுக்கியதால் Sevelen SG பகுதியில் கார் மற்றும் டிரக் மோதி விபத்து. வியாழன் அன்று (டிசம்பர் 15, 2022), காலை 6:30 மணியளவில், Schildstrasse ல் காரும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து சம்பவத்தின் போது 37 வயதான சாரதியும், 33 வயதுடைய அவரது பயணியும் லேசான காயமடைந்துள்ளனர்.
33 வயதான அவரை ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. சுமார் 20,000 பிராங்க் மதிப்புள்ள சொத்து சேதம் ஏற்பட்டது.
வீதி வழுக்கியதால் Sevelen SG பகுதியில் கார் மற்றும் டிரக் மோதி விபத்து
37 வயதான நபர் தனது காரையும் 33 வயது பயணியையும் Schildstrasse இல் இருந்து Bahnhofstrasse திசையில் ஓட்டிச் சென்றார். பனி படர்ந்த சாலையில் கார் சறுக்கி ஒரு வளைவில் எதிரே வந்த பாதையில் மோதிக்கொண்டதனாலையே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.