வீட்டிற்குள் திருட முற்பட்ட இரண்டு இளைஞர்கள் பாசல் போலீசாரால் கைது – டிசம்பர் 31, 2024 அன்று, இரவு 11:50 மணியளவில், பாசல்-லேண்ட்ஷாஃப்ட்டின் Muttenz இல் உள்ள Lutzertstrasse இல் உள்ள ஒரு குடும்ப வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது.
வீட்டில் வசிப்பவர், தெரியாத இருவர் உள்ளே நுழைய முயற்சிப்பதைக் கண்டு, உடனடியாக பாசல்-லேண்ட்ஷாஃப்ட் (landschaft) பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். குற்றவாளிகள் தப்பியோடுவதைக் கண்டதும், சந்தேக நபர்களைத் தேடுவதற்காக பல பொலிஸ் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தேடுதலின் போது, குடியிருப்பாளர் கூறிய விளக்கத்துடன் பொருந்திய இருவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். 33 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள், பாஸல் நோக்கிச் சென்ற ட்ராம் வண்டியில் காணப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அல்ஜீரிய பிரஜைகள். இவர்களுக்கு வேறு குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(c) Polizei Basel-Landschaft