வாக்குவாதத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் – 45 வயது நபர் காயம்
செவ்வாய் மாலை 8:30 மணிக்குப் பிறகு சிர்னாச்சில் உள்ள Winterthurestrasse இல் உள்ள ஒரு உணவகம் முன் வாக்குவாதம் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் பற்றி துர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவிக்கையில், 45 வயதான ஒருவர் 37 வயதுடைய ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டினார்.

இதன்போது 45 வயதான சந்தேக நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குற்றச்செயலில் ஈடுபட்ட மாசிடோனியன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். வாக்குவாதத்திற்கான காரணம் மற்றும் காயங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகராறு குறித்து தகவல் அளிக்கக்கூடிய சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர்.