வலைஸ் புயல் தாக்கம் : இறந்தவர் அடையாளம் காணப்பட்டார்!!
கடந்த வார இறுதியில் வீசிய புயலால் வலைஸ் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் போது ஹோட்டல் ஒன்றுக்குள் நீர் புகுந்தமையால் ஒருவர் அதில் சிக்கி வெளியில் வரமுடியாமல் காணமால் போயிருந்தார்.
அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இறந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். மேலும் ஒருவர் காணமால் போயிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

ஹோட்டலில் இறந்த நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 67 வயதான ஜெர்மன் பிரஜை என தெரipவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அந்த நபர் பொருட்களை சேகரிப்பதற்காக ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்தார் எனவும் திரளான தண்ணீரால் அவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி சரியான நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியேற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.