வரி விதிகளை மீறி சுவிஸ் கொள்வனவாளர்கள் ஜெர்மனியில் ஷாப்பிங் செய்ய புதிய யோசனை
எல்லை கடந்து பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 2025, ஜனவரி 1 முதல் ஒரு புதிய விதி அமுல்படுத்தப்பட்டிருந்தது. சுவிஸ் குடிமக்கள் ஒரு நபருக்கு 150 பிராங்குகள் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே சுவிட்சர்லாந்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள் . முன்பு இது 300 பிராங்குகளாக இருந்தது.
இது ஜெர்மனியில் ஷாப்பிங் செய்வதை அதிக விலை கொண்டதாக ஆக்குகிறது. ஆனால் **எடேகா** மற்றும் **மார்க்ட்காஃப்** (Edeka and Marktkauf ) போன்ற ஜெர்மன் பல்பொருள் அங்காடிகளுக்கு ஒரு எளிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது, காரில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து ஷாப்பிங் ஷாப்பிங் செய்ய வந்தால் அதிக பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என்பதே அது.

### இது எப்படி வேலை செய்கிறது:
* **காரில் உள்ள ஒவ்வொருவருக்கும்** 150 பிராங்குகள் வரி இல்லாத கொடுப்பனவு உண்டு. உதாரணமாக, **நான்கு பேர்** ஒன்றாக ஜெர்மனிக்குப் பயணம் செய்தால், **மொத்தம் 600 பிராங்குகள்** வரி இல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்லாம். முக்கியமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை தெளிவாக பிரித்து காட்டவேண்டும். அனைத்தும் ஒருவருக்கு அல்ல! என்பதை எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
### அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
விதிகளைப் பின்பற்றினால் சுவிஸ் சுங்கத்துறை இவ்வாறு பலர் ஒன்றிணைந்து பயணித்து பொருட்களை கொள்வனவு செய்வதை அனுமதிக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு அபராதம் அல்லது கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய விதி இருந்தபோதிலும், புத்திசாலித்தனமாகத் திட்டமிடுபவர்கள் ஜெர்மனியில் மலிவாக ஷாப்பிங் செய்யலாம்.