லவுசான் மற்றும் ஜெனிவா இடையே சிறப்பானதொரு புதிய ரயில் பாதைக்கு எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஜெனீவா மற்றும் லவுசான் இடையே பாதையை நீட்டிக்க இரண்டு நகராட்சிகளுக்கு இடையே 9 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே சுரங்கப்பாதையை பிப்ரவரியில் நிர்மாணித்த பிறகு, தேசிய கவுன்சில் நேற்று திங்களன்று இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
லவுசான் மற்றும் ஜெனீவா இடையேயான ரயில் பாதை சுவிட்சர்லாந்தில் மிகவும் பரபரப்பான ஒன்றாகும்.
எனவே சமீப ஆண்டுகளில் இருந்ததைப் போல, அது மிகவும் சிறப்பானதாகவும், இடையூறுகள் குறைவாகவும் இருக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.