லண்டனில் இருந்து சூரிச் சென்ற விமானத்தில் செயல் இழந்த பிறேக்.!! லண்டனில் இருந்து சூரிச் நோக்கி வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தவித்த சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சூரிச் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் Aiway “ஏர்பஸ் A319” விமானம், லண்டன் ஹீத்ரோவில் இருந்து வந்து தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து இழுந்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரடி கண்காணிப்பு சேவையான Flightradar24 இன் தரவுகளின்படி, லண்டனில் இருந்து மாலை 6:50 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் ஆரம்பத்தில் அசம்பாவிதம் இல்லாமல் சென்றது. எவ்வாறாயினும், சூரிச்சில் தரையிறங்குவதற்கு முன்பு, விமானம் ஆர்காவ் மற்றும் சோலோதர்ன் மண்டலங்களில் மூன்று முறை வட்டமிட வேண்டியிருந்தது.

இறுதியாக சூரிச் விமான நிலையத்தில் இரவு 8:20 மணிக்கு தரையிறங்கியது. இந்த தாமதத்திற்கு காரணம் விமானத்தின் பிரேக் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை என தெரிவிக்கப்படுகிறது.
விமானம் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே ஓடுபாதையை விட்டு வெளியேறியதால், சூரிச் விமான நிலையத்தில் மீதமுள்ள விமான போக்குவரத்து இந்த சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்சம்பவத்தின் காரணமாக சில விமானங்கள் தாமதமாக புறப்பட நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.