மேட்டர்ஹார்ன் மலையில் சறுக்கி விழுந்து ஒருவர் பலி ஜூன் 4 அன்று, மேட்டர்ஹார்னின் கிழக்குப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மலையேறுபவர் விழுந்து பலத்த காயங்களுக்கு ஆளானார்.
இரண்டு நபர்கள் அதிகாலையில் மேட்டர்ஹார்னில் ஒரு மலைப் பயணத்திற்கு புறப்பட்டனர். காலை 8 மணியளவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,050 மீற்றர் உயரத்தை அடைந்த பிறகு, அவர்கள் மேட்டர்ஹார்னின் கிழக்கு முகத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.

இருவரில் ஒருவர் கீழே இறங்கும் போது சமநிலையை இழந்து பின்னர் கிழக்கு பகுதியில் பல நூறு மீட்டர்கள் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். அவரது கூட்டாளி உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் குறித்த நபரை இறந்த நிலையிலையே மீட்க முடிந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். பலியானவர் 34 வயதான இத்தாலியர் என தெரியவந்துள்ளது.
Valais கன்டோனல் போலீஸ்