மூக்கு துடைக்கப்போன பெண்ணுக்கு நேர்ந்த கதி : முட்டி மோதிய கார் சேதம்
ஷப்ஹவுஷன் மாகாணத்தில் அண்மையில் ஒரு அசாதாரண விபத்து பதிவாகியுள்ளது. ஷப்ஹவுஷன் Schleitheim (ஷ்லீத்தெய்மில்) ஒரு பெண் ஓட்டிச் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதியது. அதிஷ்ட்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் காரும் மரமும் சேதமடைந்தன.
இந்த சம்பவம் ஜூன் 3, 2025 செவ்வாய்க்கிழமை மாலை, அன்று மாலை சுமார் 8:15 மணியளவில் ஹாலௌர்ஸ்ட்ராஸ்ஸில் (Hallauerstrasse) நடந்தது. 40 வயதுடைய அந்த பெண் ஜெர்மனியின் வில்லிங்கன்-ஸ்வென்னிங்கன் நோக்கி காரில் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அவர் வாகனம் ஓட்டும் போது திடீரென தும்மல் வந்ததாகவும் தான் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி தும்மியதாகவும் தெரிவித்தார். திடீரென தும்மியதால் அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டார்.

தாறுமாறாக சென்ற கார் சாலையின் வலது பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் நேராக மோதியது. விபத்து நடந்ததும் அவசர சேவைகள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தன. சம்பவத்தில் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. மற்ற வாகனங்கள் எதுவும் சம்பவத்தில் தொடர்புடையதாக இல்லை.
விபத்தால் காரில் பாரிய சேதம் ஏற்பட்டது. மரமும் பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம், வாகனம் ஓட்டும் போது சாதாரணமான ஒரு செயலும் ஒரு விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதை நினைவூட்டுகிறது. சாலையில் முழு கவனத்துடன் இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதி செய்கிறது.
@Kapo SH