மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியர்கள் – அமுலுக்கு வரும் புதிய சட்டம் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான எந்தவொரு பாலியல் உறவும் சட்டவிரோதமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த கன்டோன் வாட் தனது சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது.
இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நியூசெட்டல் மாகாணத்தில் உள்ள ஒரு ஆசிரியர் கடந்த 20 ஆண்டுகளாக 17 முதல் 21 வயது வரையிலான தனது மாணவர்களுடன் பல உறவுகளை வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து இவ்விடயம் தொடர்பாக சட்டமாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

பசுமைக் கட்சி உறுப்பினர் யானிக் மௌரி இது தொடர்பான புதிய வரைவைச் சமர்ப்பித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான அனைத்து பாலியல் தொடர்புகளும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அந்த வரைபு சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தற்போது பலரது ஆதரவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் சூரிச்சில் உள்ள ஒரு பாடசாலையிலும் ஆசரியர் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.