மத்திய கிழக்கு போர் பதற்றம் சுவிஸ் பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பல்வேறு மருந்து பொருள் நிறுவனங்கள் இஸ்ரேலில் இயங்கி வருகின்றன.
மேலும் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை நம்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் அண்மைக்காலமாக கடுமையான மோதல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரோச்சே, நொவிராட்ஸ், லொன்ஸா மற்றும் சின்ஜென்டா ஆகிய பிரபல சுவிட்சர்லாந்து மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாந்தின் அதிக அளவான மருந்து பொருட்களையும் ரசாயனங்களையும் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் காணப்படுகின்றது.
இஸ்ரேலிய மண்ணில் சுவிட்சர்லாந்தின் 30 நிறுவனங்களின் கிளைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 1.86 பில்லியன் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகிறது.
சில பிரபல மருந்து பொருள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்களவு பணியாளர்கள் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்து பொருள் நிறுவனங்களின் பலவற்றுக்கு இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த போர் பதற்றம் காரணமாக தொடர்ந்தும் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.