பேர்ன் மாகாணத்தில் இ-பைக்கில் விபத்துக்குள்ளானவர் மரணம் – சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில் Köniz இல் புதன்கிழமை மாலை மின்-பைக் விபத்தில் சிக்கிய ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிசம்பர் 18, 2024 அன்று, Könizstrasse இல், அந்த நபர் தனது மின்- பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், அவர் டிசம்பர் 21, 2024 சனிக்கிழமை மாலை இறந்தார்.

58 வயதுடைய சீனப் பிரஜையான அந்த நபர் பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெர்ன் கன்டோனல் காவல்துறை, பெர்ன்-மிட்டல்லேண்டின் பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து விபத்துக்கான காரணத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
(c) Kantonspolizei Bern