பேர்ன் போலீசாரின் திடீர் வேக சோதனை : சிக்கிய 93 ஓட்டுனர்கள்..!!! வெள்ளி முதல் சனிக்கிழமை வரை, பெர்னில் பெர்ன் கன்டோனல் போலீசார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேக அளவீடுகளை மேற்கொண்டனர்.
அந்த சோதனை நடவடிக்கை லேசர் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுமார் 93 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

5 இடங்களில் இரவு முழுவதும் சோதனை நடந்தது. மொத்தம் 93 அதிவேக குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன. 12 ஓட்டுநர்கள் மீது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
60 கிலோமீற்றர் வேக வரம்புள்ள பகுதிகளிலையே அதிகளவு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலர் 80 கீலோமீற்றருக்கு அதிகளவான வேகத்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.