சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதராலயப்பணியாளர்களும் அதிகாரிகளும் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு 16.05.24 வியாழன் நண்பகல் 13.00 மணிக்கு வருகை அளித்து பயிலரங்கில் பங்கெடுத்தனர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அனைவரையும் வரவேற்றார். சைவநெறிக்கூடத்தின் நோக்கத்தையும் செயற்பாட்டினையும் விளக்கி அறிமுகம் செய்து வைத்தார். அதிகாரிகளுக்கு பூமாலை அணிவித்து மதிப்பளித்தார்.

இளையவரான செல்வி சாகித்தியா பயிலரங்கினை ஆற்றிவைத்தார்.
அனைத்து அடியவர்களும் கருவறை வரை சென்று வழிபடும் சிறப்பும், தாய் மொழி தமிழில் வழிபாடும், பெண் அர்ச்சகர்களும் ஞானலிங்கேச்சுரத்தில் வழிபாடு ஆற்றும் நடைமுறையும், அனைவரும் தமிழ் அருட்சுனையர் ஆகலாம் எனும் வாய்ப்பும் பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
வருகை அளித்திருந்த அனைவரும் ஆர்வத்துடன் பயிலரங்கில் பங்கெடுத்து தமது கேள்விகளுக்கு பதில் பெற்று தெளிவு படுத்திக்கொண்டனர்.