பேர்ன் கன்டோனல் பொலிசார் அத்துமீறல் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் தொடர்பாக ஒன்பது பேரை வார இறுதியில் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
சனிக்கிழமை காலை 5:40 மணியளவில், பெர்னில் உள்ள Tellstrasse (டெல்ஸ்ட்ராஸ்ஸில்) உள்ள ஒரு முகாமுக்குள் இனந்தெரியாதவர்கள் நடமாடுவதாக காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் வந்து பார்த்தபோது வாகனத்தில் இருந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், காலை 10:00 மணியளவில், மேலதிக விசாரணைக்காக பொலிஸார் அந்த இடத்திற்கு திரும்பியபோது, அதே முகாமில் மேலும் இருவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அதே நாளில், காலை 10:00 மணிக்கு முன்பு, ஒரு குடியிருப்பாளர் Engehaldenstrasse (எங்கெஹால்டென்ஸ்ட்ராஸ்ஸில்) ஒரு வீட்டிற்குள் மர்மநபர் இருப்பதாக புகார் செய்தார். குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் வீட்டின் கெல்லர் பகுதியில் மறைந்திருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தனர. பின்னர் குறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதே வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 2:30 மணியளவில், பெர்னில் உள்ள Eigerplatz (ஈகர்ப்ளாட்ஸில்) உள்ள ஒரு கோப் கடையில் உடைப்பு சம்பவத்தினால் அலாரம் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடையைச் சுற்றி வளைத்துஇ சிறிது நேரம் துரத்திச் சென்று மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
மேலும் பேர்ன்னில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 16 முதல் 27 வயதுடைய ஒன்பது ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேர்ன்-மிட்டல் லேண்டின் பிராந்திய அரசு வழக்கறிஞர் மற்றும் இளைஞர் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெர்ன் கண்டோனல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(c) பெர்ன் கன்டோனல் போலீஸ்