பேர்ன் (BERN) இல் ஆயுதமேந்திய மர்மநபரால் பெட்ரோல் நிலையம் கொள்ளை.!
2025 ஜூன் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் சுவிட்சர்லாந்தின் வீலில் உள்ள உள்ள (ப்ரூக்த்ராஸ்சா) Brüggstrasse 106-இல் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையக் கடையில் மர்ம நபர் நபர் ஒருவரால் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாக தகவல் கிடைத்ததும் Bern கன்டோன் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் ஆரம்ப கட்டத் தகவல்களின் படி, சந்தேக நபர் பெட்ரோல் நிலைய கடைக்குள் நுழைந்து பணியாளரை மிரட்டி பணப்பெட்டியில் இருந்த ரொக்கத்தை எடுத்துக்கொண்டு Alexander-Moser-Strasse திசையில் நடந்து தப்பியுள்ளார்.
பேர்ன் இல் ஆயுதமேந்திய மர்மநபரால் பெட்ரோல் நிலையம் கொள்ளை.!
கடைக்குள் பணியாற்றிய பெண் ஊழியர் சம்பவத்தில் காயமின்றி பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையன் சுமார் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர், வெளிர் நிற தோல் மற்றும் தாடியுடன் இருப்பவர். சம்பவத்தின் போது வெளிர் நீல ஜீன்ஸ் ஷார்ட்ஸ், வெள்ளை ஷூஸ் அணிந்திருந்தார் மற்றும் முகத்தை மூடி கண்ணாடி அணிந்திருந்தார்.
இவர் ஜெர்மன் மொழியில் பேசினார். கொள்ளையனை கண்டவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட இடத்தில் கண்காணிப்பு காட்சிகளைப் பெற்றிருப்பவர்கள் உடனடியாக Bern ன்டோன் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.